Deep Work: Rules for Focused Success (Tamil) MPH

Publisher:
Manjul
| Author:
Cal Newport
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Cal Newport
Language:
Tamil
Format:
Paperback

298

Save: 15%

In stock

Ships within:
1-4 Days

In stock

Book Type

Availiblity

ISBN:
SKU 9789391242961 Category
Category:
Page Extent:
304

‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது. ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் – இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்! கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்..

Reviews

There are no reviews yet.

Be the first to review “Deep Work: Rules for Focused Success (Tamil) MPH”

Your email address will not be published. Required fields are marked *

Description

About Author

கால் நியூபோர்ட் அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளார். அதோடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நம்முடைய கலாச்சாரத்தின் சங்கமத்தைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் அவர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற, சிறப்பான விற்பனையாகின்ற நூல்கள் பட்டியலில் அவருடைய நூல்களும் இடம்பெற்றுள்ளன. அவர் இதுவரை எட்டு நூல்களை எழுதியுள்ளார். ‘டீப் வொர்க்,’ ‘எ வேர்ல்டு வித்தவுட் இமெயில்,’ ‘டிஜிட்டல் மினமலிசம்’ ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. அவருடைய நூல்கள் முப்பத்தைந்திற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நியூயார்க் டைம்ஸ், நியூயார்க்கர் உட்பட, பல பிரபலமான பத்திரிகைகளில் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். அவர் தன்னுடைய வலைத்தளத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருகின்ற கட்டுரைகளுக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கின்றனர். அவருடைய ‘பாட்காஸ்ட்’களும் மிகப் பிரபலமானவை. அவர் தற்போது தன்னுடைய மனைவியுடனும் மூன்று மகன்களுடனும் மேரிலேன்டில் வசித்து வருகிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Deep Work: Rules for Focused Success (Tamil) MPH”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS

RECENTLY VIEWED