Cashflow Quadrant (Tamil)

Publisher:
Manjul
| Author:
Robert T. Kiyosaki
| Language:
Tamil
| Format:
Paperback
Publisher:
Manjul
Author:
Robert T. Kiyosaki
Language:
Tamil
Format:
Paperback

424

Save: 15%

In stock

Ships within:
1-4 Days

In stock

Book Type

Availiblity

ISBN:
SKU 9789355431851 Category
Category:
Page Extent:
338

“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.” சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது. பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா? • பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்? • சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்? • தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?

Reviews

There are no reviews yet.

Be the first to review “Cashflow Quadrant (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

Description

About Author

உலகம் நெடுகிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் விதம் குறித்துக் கேள்வி கேட்டு, அதை மாற்றியுள்ளவர் என்ற பெருமைக்குரியவர் ராபர்ட் கியோஸாகி. பணத்தைப் பற்றிய பாரம்பரியச் சிந்தனைகளுடன் முரண்படுகின்ற அவர், வெளிப்படையாகவும் துணிச்சலோடும் பேசுகின்றவர். எல்லோருக்கும் நிதிசார் கல்வி கிடைக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுத்து வருகிறார். About the Translator நாகலட்சுமி சண்முகம் ஒரு தலைசிறந்த பேச்சாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். கடந்த பத்து ஆண்டுகளில் 95 நூல்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. இவருடைய மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைத்துள்ள சில அங்கீகாரங்களில், ‘சேப்பியன்ஸ் – மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ நூலுக்காகத் திருப்பூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய விருதும், ‘இறுதிச் சொற்பொழிவு’ நூலுக்காக ‘நல்லி திசையெட்டும் விருதும்’, தமிழக அரசு வழங்கிய ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருதும் அடங்கும். தம்பதியருக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு இவர் எழுதிய ‘மகிழ்ச்சியான மணவாழ்க்கை – மறந்து போன ரகசியங்கள்’ என்ற நூல் இவருடைய முதல் சுயபடைப்பாகும். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான திரு முத்துசாமி அவர்களின் பேத்திகளில் ஒருவர் இவர். இவருடைய கணவர் திரு PSV குமாரசாமியும் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாகலட்சுமியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அவரை மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளவும் www.NagalakshmiShanmugam.com என்ற அவருடைய வலைத்தளத்தை அணுகலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Cashflow Quadrant (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS

RECENTLY VIEWED